Trump exempts iPhones laptops: அப்படியே U-டேன் அடித்த ரம்.. சீனாவுக்கு கிடைத்த பெரும் வெற்றி !

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு 130% விகித வரியை விரித்து பெரும் நாடகம் ஆடி வரும் ரம், தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் ஆப்பிள் ஐ-போன், லேப் டொப் மற்றும் கணணிகளுக்கு வரி இல்லை என்று அறிவித்து. உலக அரங்கில் மொக்கை பட்டம் வாங்கி இருப்பதோடு..

இது சீனாவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்கப்படுகிறது. இன்றைய நவீன உலகத்தில் சீனாவை புறம் தள்ளி எந்த ஒரு வணிகத்திலும் ஈடு படவே முடியாது. காரணம் அவர்கள் எலக்ரானிக்ஸ் , துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் தான்.

ஐ-போன் மட்டும் அல்ல உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தமது எலக்ரானிக்ஸ் கருவிகளை சீனாவில் தான் தயாரித்து வருகிறது. இந்த விடையங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் டொனால் ரம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது, அவரது திறமை குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எடுப்பார் கை பிள்ளை போல, தனக்கு பக்கம் உள்ள சிலரின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டு ரம் செயல்பட்டு வருவது, அமெரிக்காவை பெரும் சிக்கலில் கொண்டு போய் விடக்கூடும்.