Trump’s new reciprocal tariffs causing market turmoil: ஒரே நாளில் 18B பில்லியன் டாலர்களை இழந்த Facebook !

கடந்த 3ம் திகதி ரம் அறிவித்த வரிகளால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ந்து போயுள்ள நிலையில். அமெரிக்க நிறுவனமான மீட்டா(பேஸ்புக்) ஒரே நாளில் சுமார் 18பில்லியன்( மில்லியன் அல்ல பில்லியன்) டாலர்களை இழந்துள்ளது. பல அமெரிக்க கம்பெனிகளின் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒட்டு மொத்தமான உலகில் உள்ள 500 மிக மிக முக்கியமான பெரிய செல்வந்தர்களின் கம்பெனிகள் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக 209பில்லியன் டாலர்களை அவர்கள் இழந்துள்ளார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக, பெரும் சரிவு ஏற்பட்டது. அதற்கு பின்னர் ஏற்பட்ட மற்றும் அதனை விட பெரும் சரிவாக இது பார்கப்படுகிறது. இவை அனைத்துமே நடக்கும் என்று தெரிந்தும் ரம் இந்த புது வரிகளை விதித்துள்ளார். அவர் எதிர்பார்த்தது நடக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் மாறாக எதிர் தாக்கங்களே அதிகரித்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தம் மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக வரிகளுக்கு பதிலடி கொடுக்க உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து வரும், பொருட்களுக்கு வரி அதிகரிக்க உள்ளது. ரம்பின் இந்த நடவடிக்கையை, வல்லுனர்கள் மற்றும் வணிக ஆய்வாளர்கள், மிகவும் கேவலமான வரி விதிப்பு என்று வர்ணித்து வருகிறார்கள்.

Source by Google : Meta CEO Mark Zuckerberg experienced the largest decline in net worth on April 3, losing $17.9 billion. This massive loss occurred alongside a $208 billion collective drop in market value among the world’s wealthiest individuals, triggered by US President Trump’s new reciprocal tariffs causing market turmoil.