மிகவும் அதி நவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க உள்ளது. AI உதவியோடு தாமாகவே எதிரியை அவதானித்து தாக்குதல் நடத்தக் கூடிய இந்த விமானங்களை உக்ரைனுக்கு வழங்க கியர் ஸ்டாமர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் தற்கொலை தாக்குதல் விமானம், மற்றும் ஏவுகணைகளை ஏவக் கூடிய விமானம் என்று 2 வகையாக உள்ளது. இந்த 2 ரக விமானங்களையும் பிரிட்டன் உக்ரைனுக்கு கொடுக்க உள்ளது. இது ரஷ்ய ராணுவத்தின் முன் நகர்வை வெகுவாகக் குறைக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உளவுத் தகவல்களை, உக்ரைனுக்கு கொடுக்க மறுத்து விட்டது. இதனால் எந்தப் பகுதியில் ரஷ்ய ராணுவம் எப்படி முன்னேறுகிறது என்பது போன்ற தகவல்கள் இனி உக்ரைனுக்கு கிடைக்கப் போவது இல்லை. இது ரஷ்யாவுக்கு சாதகமான ஒரு விடையம். இந்த நிலையை சமாளிக்க இந்த வேவுபார்க்கும் ஆளில்லா விமானம் உதவும்.
அமெரிக்க அதிபர் ரம் உக்ரைனுக்கு விதிக்கும் ஒவ்வொரு தடைக்கும், எதிராக பிரித்தானியா ஏதோ ஒரு வகையில் உக்ரைனுக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.