ஓராண்டு இல்லாத அளவுக்கு உணவுப்பொருள் விலை உயர்வு – சூரிய வெப்பம் காரணமா?

ஓராண்டு இல்லாத அளவுக்கு உணவுப்பொருள் விலை உயர்வு – சூரிய வெப்பம் காரணமா?

இங்கிலாந்தில் உணவுப் பொருட்கள் விலை கடந்த ஓராண்டு இல்லாத அளவுக்கு உயர்ந்து சில்லறை விலைப் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு உணவுப்பொருட்களின் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகம் விலை உயர்வை சந்தித்துள்ளதாக சில்லறை வர்த்தகத் தொழில் குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரிட்டிஷ் சில்லறை வர்த்தகக் கூட்டமைப்பு (BRC) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் 3.7% உயர்ந்துள்ளதாகவும், இது மே மாதத்தில் பதிவான விலை உயர்வை காட்டிலும் 2.8% அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது. இறைச்சி போன்ற பொருட்ஜளில் மொத்த விலை உயர்வு, அந்த வர்த்தகம் சார்ந்த பணியாளர்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் பிஆர்சி தகவல் கூறுகிறது.

இது குறித்து BRC உடன் தரவுகளை வெளியிடும் NielsenIQ இன் சில்லறை வர்த்தகம் மற்றும் வணிக நுண்ணறிவுப் பிரிவின் தலைவர் மைக் வாட்கின்ஸ் கூறுகையில், “இந்த ஆண்டு பிற்பகுதியில் நுகர்வோரின் செலவு செய்யும் விருப்பம் குறைந்தால், விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். உணவு பொருட்களின் விலை உயர்வால் பிரிட்டனின் மொத்தப் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 3.4% ஆக குறைந்தது. ஆனால், அதிக உழைப்புச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் குடும்பக் கட்டணங்களின் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் விலை உயர்வு 3.7% ஆக உயரும் என்று இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.

அண்மை காலமாக இங்கிலாந்தில் அதிக வெப்ப அலை வீசி வருவதாலும், சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமகா இருப்பதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் தேவை அதிகரிக்க, விலைவாசி உயர்ந்துள்ளதாக பிஆர்சி தரவு கூறுகிறது.

வெப்பத்தின் தாக்கம் நாட்டின் பணவீக்கத்தை அதிகரிப்பதால் மாற்று ஏற்பட்டை அரசு செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *