UK game-changing weapon: பிரித்தானியாவின் ஒரு ஏவுகணை ரஷ்யாவை கிலி கொள்ளவைக்கும் ?

ரஷ்யா ஏவும் ஏவுகணைகளில் இருந்து பிரித்தானியா தப்ப முடியாது என்ற, கருத்துகள் தற்போது வலுப்பெற்று வருகிறது. இதனால் இஸ்ரேல் போல ஒரு அயன் டோம்(இருப்பும் வளைய) பாதுகாப்பு ஒன்றை கட்டமைக்க பிரித்தானியா நிதியை ஒதுக்கியுள்ளது. எனவே 2027 தொடக்கம் , ரஷ்யா எந்த ஏவுகணையை ஏவினாலும், அதனை பிரான்ஸ்சுக்கு அருகே வைத்து சுட்டு வீழ்த்த முடியும்.

இது இவ்வாறு இருக்க, ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எந்த ஒரு நாடாலும் தடுக்க முடியாது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்பது ஏவும் போது நேரடியாக விண் வெளி சென்று, அங்கே இருந்து செங்குத்தாக வந்து இலக்கை தாக்கும். இதனால் இந்த ஏவுகணையை தாக்கி அழிப்பது என்பது கஷ்டமான விடையம். இதனால் 1 பில்லியன் பவுண்டுகளை செலவு செய்து, பிரித்தானியா தனது சொந்த ஹைப்பட் சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க உள்ளது.

2030ம் ஆண்டு(இன்னும் 5 வருடங்களில்) பிரித்தானியாவிடம் ரஷ்யாவை தாக்கி அழிக்க கூடிய பல ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இருக்கும். இதனால் அமெரிக்காவை நம்பி பிரித்தானியா இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை தோன்றவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 44 நாடுகளில், ஹைப்பர் சோனிக் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாக பிரித்தானியா இருக்கும். அதனை விட அமெரிக்கா போல மிகவும் சக்த்திவாய்ந்த நாடாக பிரித்தானியா மாற உள்ளது.

இந்த முடிவுகள் தற்போது ரம்பின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டுள்ளது. காரணம் இப்படியும் சில விடையங்கள் நடக்கலாம் என்ற உண்மை தற்போது தான் தெரிய வர ஆரம்பித்துள்ளது.