uk sanction sri lanka for human rights violations: பிரிட்டன் அரசு சிங்கள ராணுவத் தளபதிகளுக்கு தடை விதித்துள்ளது !

இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்க, பிரித்தானிய அரசு பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே லேபர் கட்சி ஈழத் தமிழர்களுக்கு சில தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அதில் ஒரு அங்கத்தை அவர்கள் இன்றைய தினம்(24) நிறைவேற்றி, தமிழர்களுக்கு எப்பொழுதும் லேபர் கட்சி ஆதரவாக இருக்கும் என்பதனை காட்டியுள்ளார்கள்.

முதலில் பிரதமர் கியர் ஸ்டாமர், டேவிட் லாமி மற்றும் உமா குமாரன் ஆகியோருக்கே ஈழத் தமிழர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள லேபர் கட்சி, சிங்கள ராணுவத் தளபதிகளான, சர்வேந்திர சில்வா, வசந்த கருணாகொட, ஜெகத் ஜெயசூரியா, ஆகியோருக்கு பயணத் தடையை விதித்துள்ளது.

இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட இவர்களால் பயணிக்க முடியாது நிலை தோன்றியுள்ளது. தமிழருக்கான லேபர் கட்சி அமைப்பின் , இணைப்பாளர் சென் கந்தையா அவர்கள், மற்றும் கணா சொலிசிட்டர் ஆகியோர் பிரித்தானிய அரசுடன் இணைந்து செயல்பட்டு இந்த தடையை கொண்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசு(ஆழும் லேபர் கட்சி) மிகவும் காத்திரமாக இருக்கிறது. அதனால் அடுத்து இலங்கை மீது மேலும் பல அழுத்தங்களை பிரித்தானியா கொடுக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. பிரித்தானிய அரசு, மேற்கொண்டுள்ள தடை உத்தரவுகளின் ஆங்கில பதிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

Source : https://www.gov.uk/government/news/uk-sanctions-for-human-rights-violations-and-abuses-during-the-sri-lankan-civil-war