BREAKING NEWS பல ரஷ்ய விமானங்கள் பற்றி எரிகிறது: அமெரிக்காவே மிரண்டு போன ATTACK

ரஷ்யாவுக்கு உள்ளே ஒரு கண்டேனர் லாரி வழமைபோல பயணித்துக் கொண்டு இருந்துள்ளது. அது ஒரு ரஷ்ய வான் படை தளத்திற்கு அருகாமையில் செல்லும் வீதியில் பயணித்துள்ளது. திடீரென அதன் பின் கதவுகள் திறந்து கொள்ள அதில் இருந்து பல ட்ரோன்கள் சீறிப்பாய்ந்துள்ளது. வெறும் 10KM அருகே இருந்த ரஷ்ய வான் படை தளத்தை அவை துல்லியமாக தாக்க… அங்கே தரையில் இருந்த பல தாக்குதல் விமானங்கள் வெடித்து சிதறியுள்ளது. இந்த பரபரப்பான தாக்குதல் சனிக்கிழமை நடந்துள்ளது. 

இதனால் ரஷ்யாவுக்கு 7B பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு உக்ரைன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு இந்த தாக்குதலை மிகவும் துல்லியமாக நடத்தியுள்ளது. ஏற்கனவே எந்த இலக்கை தாக்க வேண்டும் என்று ட்ரோன்களுக்கு program செய்யப்பட்டு, இருந்துள்ளது. அவை வானில் பறக்க ஆரம்பித்தவேளை. தமது குறியை துல்லியமாக தாக்கியுள்ளது. எந்த ஒரு இடையூறும் இல்லை. காரணம் ரஷ்ய ராடர்களில் உக்ரைன் மண்ணை தூவியுள்ளது.

தற்போது ரஷ்ய புலனாய்வுத் துறை, குறித்த கண்டேனர் லாரியை வலை வீசி தேடி வருகிறார்கள். ஆனால் உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே பல உளவாளிகளை வைத்திருக்கிறது. ரஷ்ய ராணுவம் நகரும் திசைகளைக் கூட உக்ரைன் உடனே அறிந்துகொள்கிறது. ஆனால் ரஷ்யாவைப் பொறுத்தவரை , உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இதில் வேடிக்கை மற்றும் கொடுமையான நிகழ்வு என்னவென்றால், கண்டேனரில் இருந்து வெளியே பறந்த விமானங்களில் ஒன்றில் குண்டு இல்லை. அத்தோடு அந்த விமானம் தாக்குதல் நடந்த பின்னர் சில புகைப்படங்களை எடுத்து, உக்ரைன் தளத்திற்கு அனுப்பியுள்ளது. இதனூடாக தாக்குதல் சக்ஸ்சஸாக நடந்துள்ளது என்பதனை உக்ரைன் நிரூபித்துள்ளது.  அந்த ட்ரோனின் புகைப்படம் தான் இது. 

source:  Ukraine Strikes Grounded Russian Bombers in Major Drone Assault