Ukraine’s first all-robot offensive: வீடியோ கேம் விளையாடுவது போல ரஷ்ய ராணுவத்தை போட்டுத் தள்ளும் உக்ரைன்

கீழே வீடியோ இணைப்பு

உக்ரைன் ராணுவம் முதல் முறையாக, பாவித்துள்ள றோ-போ ஆமட் கார் சுமார் 50 ரஷ்ய ராணுவத்தை சுட்டுத்தள்ளி முன்னேறியுள்ளது. இதேவேளை உக்ரைன் குறித்த ஒரு பகுதியை குறிவைத்து கடுமையாக ட்ரோன்களை கொண்டும் தாக்கியுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் நிலை கொண்டு இருந்த ரஷ்ய ராணுவத்தினர் பலர் இறந்துள்ளார்கள். அவர்களது உடல்களை உக்ரைன் ராணுவம் காட்டியுள்ளது. ஆளே இல்லாமல், செல்லக் கூடிய இந்த டாங்கி(ஆமட் காரை) மிக மிக தொலைவில் இருந்து இயக்க முடியும். ஏதோ வீடியோ கேம் விளையாடுவது போல உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவத்தை சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அடுத்த தலைமுறை ஆயுதங்களை உக்ரைன் தற்போது பரீட்ச்சித்துப் பார்த்து வருகிறது. இவை அனைத்துமே உக்ரைன் படைகளால் தயாரிக்கப்பட்டவை என்பது வியப்பான விடையம். ரஷ்ய உக்ரைன் போரால், உக்ரைன் ராணுவம் பல ஆயுதங்களை தாமே தயாரிக்க ஆரம்பித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

உக்ரைன் தயாரித்து ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக பாவிக்கும் பல ஆயுதங்களை, சர்வதேச சந்தையில் மவுசு அதிகமாகியுள்ளது. பல நாடுகள் அவற்றை வாங்க போட்டி போடுகிறது.