ரஷ்யாவில் உள்ள கேஷ் என்னும் பெரும் நிலப்பரப்பை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன் கைப்பற்றியது. இதனை ரஷ்யா சிறிதும் எதிர்பார்கவே இல்லை. இன் நிலையில் கேஷ் நிலப்பரப்பை மீட்க்க, ரஷ்ய ராணுவம் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. இதேவேளை, ரஷ்யாவில் இருந்து கோஷ் நகர் ஊடாக எரிவாயு பைப் ஊடாக ஐரோப்பாவுக்கு செல்கிறது. இதனை உக்ரைன் படைகள் முடக்கிய நிலையில். அந்த பைப் ஊடாக ரஷ்ய கமாண்டோ படையினர், கடந்த 14 நாட்களாக , தவண்டு வந்து.
கேஷ் நகரில் பைப்பை உடைத்து வெளியேறி, அந்த இடத்தில் நிலை கொண்டு விட்டார்கள். இவை அனைத்தும் நடக்க அமெரிக்காவே காரணம். ஏன் எனில் அமெரிக்க அதிபர் கடந்த 20 தினங்களுக்கு மேலாக எந்த ஒரு புலனாய்வுத் தகவலையும் உக்ரைனுக்கு வழங்கவில்லை. இதனால் பைப் ஊடாக வந்த ரஷ்ய கமாண்டோ படை, கேஷ் நகரில் உள்ள உக்ரைன் படைகளை சுற்றிவளைத்துள்ளது.
இதனால் உக்ரைன் படைகளுக்கு ஆயுத சப்பிளை எல்லாமே துண்டிக்கப்பட்டுள்ள நிலையில். சுமார் 10,000 ஆயிரம் உக்ரைன் படைகள் தற்போது சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வகையில் அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்கு பெரும் உதவி செய்துள்ளார் என்று ஏனைய நாட்டுத் தலைவர்கள், புலம்புகிறார்கள்.
இப்படி படு கேவலமான விடையங்களை அமெரிக்க அதிபர் ரம் செய்து, கடைசியாக உக்ரைனை தன் காலடியில் மண்டியிட வைத்துள்ளார். வீரத்தோடு வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வந்த உக்ரைன் இன்று போர் நிறுத்தம் ஒன்றை தாமாகவே அறிவிக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே அமெரிக்கா எந்த ஒரு நாட்டையும், முதுகில் குத்த தயங்காது என்பது தற்போது மிகவும் தெளிவாக ஐரோப்பிய தலைவர்களுக்கு புரிந்து விட்டது.