அமெரிக்க ராணுவ தளத்தில் இருக்கும் 4,000 ராணுவத்தினர் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் உடனே அழியும் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதனை அறிந்த ஈரான் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரான் நாடு அருகில் உள்ள அமெரிக்க தளத்தை தாக்குவோம் என்றும். அங்கே உள்ள 4,000 ராணுவம் மீது கடும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் சமீப காலமாக யுரேனியத்தை அதிக அளவில் செறிவூட்டி வருகிறது. இதனூடாக அவர்கள் அணு ஆயுத உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள். இது உலகத்திற்கு பெரும் ஆபத்து என்று அமெரிக்கா கருதுகிறது.