போப் பிரான்சிஸ் காலமானார்! அதிர்ச்சியில் உலகம் – திறந்த சவப்பெட்டியில் போப்பின் உடல் படங்கள் வெளியீடு!
வாடிகன்: கத்தோலிக்க உலகின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் காலமானார் என்ற பேரதிர்ச்சித் தகவல் உலகை உலுக்கியுள்ளது. ஈஸ்டர் திங்கட்கிழமையன்று, தனது 88வது வயதில், பெருமூளை வாதம் மற்றும் அதனைத் தொடர்ந்த இதய செயலிழப்பு காரணமாக அவர் இறைவனடி சேர்ந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் துயரச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வாடிகன் நிர்வாகம், திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் அவர்களின் உடலின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளன.
இதற்கிடையில், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு மற்றும் அதற்கான தேதியை முடிவு செய்வதற்காக கர்தினால்கள் அவசரமாகக் கூடி ஆலோசித்து வருகின்றனர். போப்பின் இறுதி நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போப் பிரான்சிஸின் திடீர் மரணம் உலக கத்தோலிக்க மக்களிடையே பெரும் சோகத்தையும், உலக அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.