கனடா பிரதமர் Justin Trudeau, அமெரிக்க அதிபர் Donald Trump விதித்த புதிய வரிகளை கடுமையாக விமர்சித்து, “அமெரிக்க குடும்பங்களையே முதன்மையாக பாதிக்கக் கூடிய வர்த்தக போரை அவர் தொடங்கியுள்ளார்” என்று கூறினார்.
உக்ரைனுக்கு Trump ஆதரவை நிறுத்தல்:
கடந்த வாரம் Oval Office-ல் நடந்த சர்ச்சைக்குரிய சந்திப்புக்குப் பிறகு, Trump உக்ரைனுக்கு வழங்கப்படும் அனைத்து இராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். இது, உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy உடனான அவரது பதற்றமான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை:
ஐரோப்பிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen, 800 பில்லியன் யூரோ (€841.5bn) மதிப்புள்ள புதிய பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஆதரவு குறைந்ததால், உக்ரைனுக்கு உடனடி இராணுவ உதவி வழங்கும் திட்டம் இதில் அடங்கும்.
Trump-ன் வரிகள் – கனடா, மெக்ஸிகோ, சீனாவுக்கு பாதிப்பு
செவ்வாய்க்கிழமை Congress-ல் உரையாற்றவுள்ள Trump, மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஏற்கனவே 10% வரி விதித்திருந்த நிலையில், இதனால் அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் மேலும் திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trudeau-வின் கண்டனம்
Justin Trudeau, Trump-ன் இந்த முடிவுகள் கனடா மற்றும் அமெரிக்க உறவை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி, “மிகவும் முட்டாள்தனமான” நடவடிக்கை என திட்டவட்டமாக விமர்சித்துள்ளார்