அமெரிக்க துணை ஜனாதிபதி சொன்ன வார்த்தை: பிரிட்டனிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும் !

அமெரிக்க துணை ஜனாதிபதி, பிரித்தானிய ராணுவத்தை மிகவும் தரக் குறைவாக மேடை ஒன்றில் பேசியுள்ள விடையம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த 30 வருடங்களில் எந்த ஒரு நாட்டோடும் போரில் ஈடுபடாத பிரிட்டன் ராணுவத்திற்கு என்ன தெரியும் என்று துணை ஜனாதிபது JD வான்ஸ் கேள்வி எழுப்பினார்.

ஆனால் ஆப்கானிஸ்தானில், போரில் ஈடுபட்டு ஒரு கால் மற்றும் ஒரு கையை இழந்த ராணுவ வீரர், JD வான்ஸ் உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பென் மக்பீன் என்னும் இந்த ராணுவ வீரர், இளவரசர் ஹரியின் மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார்.

இதனால் அமெரிக்க துணை ஜனாதிபதி, JD வான்ஸ்சுக்கு மேலும் அழுத்தம் சென்று வருகிறது. ஆனால் இன்றைய தினம்(05) பேசிய JD வான்ஸ், தான் பிரித்தானிய ராணுவத்தை குறிப்பிடவில்லை. பொதுவாகப் பேசியதாக கூறி இந்த சர்சையில் இருந்து தப்பிக்க பார்த்துள்ளார்.