A Tale of Two Diasporas: What Lessons Can Be Learned from the Palestinian and Tamil Struggle for Global Attention?
மே 18 என்பது ஒரு இன அழிப்புக்கான நாள், என்று உலகத் தமிழர்கள் கூறி நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில். சில ஈனத் தனமான அதுவும் சிங்கள அரசியலுக்கு அடி வருடிகளாக இருக்கும் நபர்கள் சிலர், மே 18 தலைவர் இறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறி, அதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெரும் அழிவைச் சந்தித்த பாலஸ்தீன மக்களுக்கு இன்று ஒரு விடிவு கிடைத்துள்ளது. உலக வல்லரசு நாடுகள், படிப்படியாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்களை காட்டிலும் 3 மடங்கு அதிக அழிவைச் சந்தித்த தமிழ் இனம், இன்று முச்சந்தியில் அநாதையாக நிற்கிறது என்றால் ? அதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு… அது தமிழர்களுக்கு இடையே உள்ள பிரிவு, நான்… நீ… என்ற போட்டி, தான் தோன்றித் தனமாக….செயல்படுவது, சிங்களம் போடும் எலும்பை நக்குவது !
அமெரிக்காவின் செல்லப் பிள்ளை என்று அழைக்கப்படும் இஸ்ரேலையே… இன்று ஐரோப்பிய நாடுகள் எதிர்க்க ஆரம்பித்து விட்டது. இதேவேளை கனடாவும் இணைந்து விட்டது. இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை. உண்மையில் பாலஸ்தீனத்தில் கச்சா எண்ணையும் இல்லை, மண்ணில் வைரம் இல்லை, கனிம வளங்கள் கூட இல்லை வெறும் பூமி. அங்கே ஒரு பூகோழ அரசியலும் இல்லை. மக்கள் அழிக்கப்பட்டதைப் பார்த்தே உலக நாடுகள், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கிகரிக்க ஆரம்பித்துள்ளது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்று கூறப்படும் ஹமாஸ் அமைப்பை பல உலக நாடுகள், புலிகள் இயக்கம் போல தடைசெய்துள்ள நிலையில் கூட, இந்த உலக நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கிகரித்துள்ள விடையம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் எமது தமிழ் இனம் அழிக்கப்பட்டதை இன்றுவரை நாம் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழர்களை ஏன் உலக நாடுகள் அங்கிகரிக்கவில்லை ? என்று கேட்டால், அது எங்களுக்கு இடையே உள்ள பிரிவுகள் தான் காரணம். 100 தமிழ் அமைப்புகள் உள்ளது. அதில் ஒரு அமைப்பு ….அவர்களுக்கு நேரம் கிடைத்த உடனே ஐ.நா சபை(UN) செல்வார்கள், அங்கே ஒரு கோட்பாட்டை முன் வைப்பார்கள், அடுத்த அமைப்பு ஐ.நா சென்று வேறு ஒரு கோட்பாட்டை முன் வைக்கும். இப்படியே உலக நாடுகளை குழப்பிக் குழப்பி, உண்மையில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதனையே மழுங்கடித்து, தலையில் மண்ணை கிள்ளி போட்ட ஒரே இனம், தமிழ் இனம் தான்.
பாலஸ்தீனத்தைப் பாருங்கள். போராடா சில அமைப்புகள் இருந்தாலும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒரே அமைப்பாக ஒரே குரலாக தனித்துவமாக இருந்தார்கள். இன்று வெற்றி கண்டு உள்ளார்கள். ஹமாஸ் இயக்கம், ஆயுதங்களை வைத்து விட்டு, அரசியலில் இறங்கினால் அதனையும் உலக நாடுகள் வரவேற்க்கும். உதாரணமாக ஒன்றைப் பார்கலாம். பிரிட்டனில் IRA(அயர்லாந்து விடுதலை அமைப்பு) என்ற அமைப்பு 1992ம் ஆண்டு லண்டன் ஸ்டேப்பிள்ஸ் கார்னர்(London Staples corner) என்ற ஷாப்பிங் மாலில் குண்டை வைத்து பலரை கொலை செய்தார்கள். அயர்லாந்து விடுதலை அமைப்புக்கு, இன்று வரை தடை இல்லை. ஆனால் லண்டனில் எந்த ஒரு குண்டையும் வைக்காத விடுதலைப் புலிகளை கடுமையான தடைப் பட்டியலில் போட்டுள்ளது பிரித்தானிய அரசு.
இந்த தடையை எடுக்க வேண்டும் என்று ஒரு தமிழர்களும், இல்லை அதனைப் பற்றி நாம் பேசவே கூடாது என்று கூறும் மாற்று கருத்துக் கொண்ட தமிழர்களும் இன்று வரை இருப்பது தமிழர்களின் ஒரு சாபக் கேடு. புலிகளின் தடையை எடுப்பது நல்லதா இல்லையா என்று தமிழர்களே லியோனி பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருக்கும் நிலையில். எங்கே இருந்து தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் ? …பொதுவாக தமிழர்களுக்கு ஒரு தலைமை இல்லை. அப்படி இருந்தால் கூட, அவர் சொல்வதை நான் ஏன் கேட்க்க வேண்டும் ? என்ற ஆணவம்.
தலை என்ற வார்த்தையின் அர்த்தம் புரியாத தமிழார்கள்:
உடலில் உள்ள அனைத்துப் பாகங்களையும் கட்டுப்படுத்துவது தலையில் உள்ள மூளை. உதாரணமாக …காலில் ஒரு மூளை, கையில் ஒரு மூளை இருந்தால்…. எமது உடல் என்ன செய்யும் ? கால் தனியாகவும் கை தனியாகவும் சிந்தித்து எல்லாமே குழம்பிப் போகும். ஒன்றாக கூடி, ஒரு தலைமையின் கீழ் நாம் செயல்படவில்லை என்றால், இன்னும் 30 வருடங்கள் பின் நோக்கித் தான் நாம் செல்லவேண்டி இருக்கும். தேசிய தலைவருக்கு விளக்கு வைக்க வேண்டும் என்ற கோஷ்டி ! மே 18 என்றால் தலைவர் கொல்லப்பட்ட நாள் என்று பேசும் கோஷ்டியை கண்டால், ….மக்களே முதலில் செருப்பால் அடியுங்கள் ! அதன் பின்னர் தான்… தமிழர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்… முடிந்தவரை இந்தச் செய்தியை சமூக வலையத் தளங்கள் மூலம் பகிரவும்.
By
Kannan