90 நாட்களில் 150 Trade Deal செய்ய வேண்டி உள்ளது இல்லையென்றால் அமெரிக்கா காலி !

இன்னும் 90 நாட்களில், 150 வர்த்தக உடன்படிக்கையை ரம் மேற்கொண்டால் தான், அமெரிக்காவால் சமாளிக்க முடியும் என்ற சூழ் நிலை தோன்றியுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் சீனா தான். அமெரிக்க அதிபர் ரம், சீனாவுக்கு 50% விகித வரியை விதிக்க, சீனா பதிலுக்கு 36% விகிதத்தை விதிக்க, பின்னர் ரம் 104 அதன் பின்னர் 124% விகித வரியை விதித்தார். பதிலடியாக சீனா தனது நாட்டுக்கு உள்ளே வரும் அமெரிக்க பொருட்களுக்கு 100 விகித வரியை விதித்துள்ளது.

இதில் பெரும் பிரச்சனையான விடையம் எனவென்றால், சீனாவால் அமெரிக்க பொருட்களை வாங்காமல் காலம் தள்ள முடியும். ஆனால் அமெரிக்காவால் முடியாது. சீனா உரத்தை அனுப்பவில்லை என்றால், வேறு ஒரு நாட்டிடம் இருந்து உரத்தை வாங்கியே தீரவேண்டும். உரத்தை போல சுமார் 150 அத்தியவசிய பொருட்கள் தற்போது சீனா தொடக்கம் பல நாடுகளிடம் இருந்து வராது. எனவே அதற்கான டீலை ரம் வேறு நாடுகளோடு போட்டு அங்கே இருந்து தான் இறக்குமதி செய்யவேண்டி உள்ளது.

அதுவும் அமெரிக்காவிடம் 90 நாட்களுக்கு தேவையான கையிருப்பே உள்ளதாம். இதனால் 90 நாட்களில் 150 வகையான பொருட்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வர , புதிதாக சில நாடுகளை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. இந்த சவாலான விடையத்தை அமெரிக்காவால் செய்து முடிக்க முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியாது.

எனவே இன்னும் சில வாரங்களில் பெரும் நெருக்கடிகள் தோன்றவுள்ளது. இதனை வெள்ளை மாளிகையால் சமாளிக்க முடியவில்லை என்றால் அமெரிக்கா மேலும் அதள பாதாளம் நோக்கிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.