காட்டுத் தீ பரவல்; அவுஸ்திரேலியாவில் பிரச்சினைகள் தீவிரமாகின்றன

அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தின் தலைநகரமான பெர்த் நகரத்தின் புறநகரில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு காட்டுத் தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தீயினால், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக வெளியேற வேண்டிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஃபெர்னாண்டெல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, வடமேற்கு திசையில் நகர்ந்து, அருகிலுள்ள கேனிங் ஆற்று பகுதியில் பரவியுள்ளதையும் போலீஸ் மற்றும் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

தீயணைப்புப் படையின் அறிக்கையின்படி, இந்த காட்டுத் தீ மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதால், பாதைகள் தெளிவாக இருந்தால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், உடனடியாக வெளியேற முடியாதவர்கள், நீர் வசதியுள்ள அறைகளில் பாதுகாப்பாக தஞ்சமடையுமாறு கூறப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு, தீயணைப்புப் படை கூறியதன்படி, மக்களின் வீடுகளுக்கு அல்லது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாததால், தற்காலிகமாக செயற்பாடுகளை குறைத்துள்ளதாகவும், ஆனால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, வெளியேறிய மக்கள் உடனடியாக திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.