பிரிட்டனில் ஆடம்பர கார்களை உற்பத்தி செய்து, அதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த கம்பெனிகள் பல, தமது கார்களை அமெரிக்காவுக்கு அனுப்பாமல் தாமதித்து வருகிறது. ஏதாவது ஒரு தீர்வுத் திட்டம் வருமா என்று அவர்கள், காத்திருக்கிறார்கள். இதனால் கார் உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால். அரசிடம் கை நீட்டி உள்ளது இந்த கார் கம்பெனிகள் !
எனவே குறித்த சில கார் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, வேலைக்குச் செல்லாமலே சம்பளப் பணம் (FURLOUGH)வழங்கப்பட உள்ளது. இதனால் பிரித்தானிய அரசின் திறைசேரிக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது. கொரோனா கால கட்டத்தில் பல மில்லியன் மக்கள் வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் அவர்களின் சம்பளத்தில் பாதி தொகையை அரசு செலுத்தி. சுமார் 3 ரில்லியன் பவுண்டுகள் நஷ்டம் அடைந்தது. அதன் பலா பலனை பிரித்தானிய மக்கள் இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.
2020ம் ஆண்டுக்கு பின்னர் இன்றுவரை(2025) பிரித்தானியாவில் அனைத்துப் பொருட்களும் விலையேறியது. வங்கிகள் தமது வட்டி விகிதத்தை பன்மடங்காக அதிகரித்தார்கள். கவுன்சில் டாக்ஸ் எகிறியது. இப்படி படிப்படியாக எல்லாமே எகிறி நடுத்தர மக்கள் வாழவே முடியாது என்ற நிலை தோன்றியது. தற்போது தான் பிரித்தானியா வழமைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் டொனால் ரம் விதித்துள்ள 10% விகித கூடுதல் வரியால், பிரித்தானியா பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது.
அதன் தாக்கத்தை உடனே உணரும் நிலையில் பிரித்தானியா உள்ளது. பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள் தமது பொருட்களை அனுப்பாமல் தாமதித்து வருகிறார்கள்.