மிகவும் கீழ் தரமான வார்தைகளை, அமெரிக்க அதிபர் ரம் மக்கள் மற்றும் ஊடகத்தின் முன்னர் பேசியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இதுபோல பேசியதே இல்லை என்று சொல்லலாம். அதாவது 70 நாடுகளின் தலைவர்கள் தமக்கு அழைப்பை விடுத்தாதகவும், அவர்கள் தனது பின் பக்கத்தை(குதத்தில்) முத்தமிட்டார்கள் என்றும் ரம் பேசியுள்ள விடையம், பல தலைவர்களை முகம் சுழிக்கவைத்துள்ளது.
தன்னை Sir … போட்டு அவர்கள் அழைத்தாகவும், டெலிபோனில் கெஞ்சியதாகவும் ரம் தெரிவித்துள்ளார். இதனூடாக தான் வென்றுவிட்டதாக ரம் அறிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் பயம் கொள்ளத் தேவை இல்லை என்று அவர் மேலும் அறிவித்துள்ளார். ஆனால் நிலமை அப்படி இல்லை. அமெரிக்கா பெரும் படு குழி நோக்கி நகர்ந்து செல்கிறது. காரணம் பல உலக நாடுகள் தற்போது தமது பகையை மறந்து சீனாவுடன் , உறவை புதுப்பிக்க விரும்பம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தொடக்கம் , பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா என்று பல நாடுகள் இனி சீனாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள பெரிய வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கா டாலர் பெரும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில். அமெரிக்க பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கே மக்கள் ரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
ஆனால் இவை எதனையும் ரம் கருத்தில் கொள்ளவில்லை என்பதே உண்மை நிலை. வெள்ளை மாளிகைக்கு அடி பணிந்தால், வரிகள் குறைக்கப்படும் என்பது ரம்பின் கொள்கையாக உள்ளது.