வென் நீர் ஊற்றில் குளிக்க முனைந்து, அந்த தண்ணீரில் அப்படியே கரைந்து காணாமல் போயுள்ளார் 23 வயது மாணவர். ஆனால் இதனை அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள் அங்கே நின்ற உல்லாசப் பயணிகள். அதிலும் மோசமான விடையம் என்னவென்றால்,
அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க, ஒரு பெண் அவரை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார் என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள நஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இடத்தில் இந்த Grand Prismatic Spring என்ற வென்னீர் ஊற்று உள்ளது. கொலின் ஸ்காட் என்னும் 23 வயது நபர், அதில் குளிக்கச் சென்றாரோ இல்லை தவறுதலாக விழுந்து விட்டாரோ தெரியவில்லை. 95பாகை வெப்பத்தில் இந்த வென் நீர் ஊற்று உள்ளது.
இதற்கு அடியில் சல்பர் எனப்படும் தாதுப் பொருட்கள் அதிக வெப்பநிலையில் உள்ளதால் இதனை மஞ்சல் கல் வென் நீர் ஊற்று என்றும் அழைப்பார்கள். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, அதனை வெளியிட்ட பெண்ணை பலரும் திட்டி வருகிறார்கள். எந்த மாதிரியான ஒரு மனிதர் நீங்கள் ? என்று பலரும் கேள்வி எழுப்பி அவரை கிழி கிழி என்று கிழித்து வருகிறார்கள்.