ஐரோப்பிய கண்டத்தையே கை விட்ட ரம்: ஜிலன்ஸ்கிக்கு அதி உச்ச வரவேற்ப்பு !

2 தினங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகையில் வைத்து, உக்ரைன் அதிபரை அவமானப்படுத்தி அனுப்பி இருந்தது அமெரிக்கா. அதுபோக வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் நேரடியாகவே கடுமையாக பேசி தான் எதிர்ப்பை காட்டி விட்டு அங்கே இருந்து நேராக பிரித்தானியா வந்துள்ளார். இதனை அடுத்து பிரித்தானிய மன்னர், சார்ளஸ் அவர்கள் உடனே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

உக்ரைன் அதிபருக்கு அதி உச்ச ராஜ வரவேற்ப்பு பிரித்தானியாவில் கொடுக்கப்பட்ட விடையம், ரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தையே ரம் தற்போது கை விட்டு விட்டார் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. ஐரோப்பியர்கள் தமது பாதுகாப்பை தாமே பார்த்துக் கொள்ளட்டும் என்ற முடிவை ரம் எட்டியுள்ளார்.

இதனால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரு முடிவை நேற்று(02) எடுத்துள்ளது. அதாவது பிரிட்டன் உட்பட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு உதவிசெய்வது என்றும். உக்ரைன் நாட்டை காப்பாற்றுவது என்றும் முடிவை எடுத்துள்ளார்கள். இன்னும் 4 வருடங்களில் ரம் ஆட்சி முடிவுக்கு வரும். அவரால் அடுத்த முறை, ஜனதிபதி ஆக முடியாது. காரணம் அவர் 2 தடவை ஜனாதிபதியாக இருந்து விட்டார்.

எனவே அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி மூலமாகவே இனி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுவரை எல்லாமே தலை கீழாக மாறும் என்பதனை ஐரோப்பிய நாடுகள் நன்றாக உண்ர்ந்து விட்டார்கள்.