உலகிலேயே முதல்முறையாக! ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய சமூக ஊடகத் தடைச் சட்டத்திற்கு (Social Media Ban) இணங்கும் வகையில், மெட்டா (Meta) நிறுவனம் 16 வயதுக்குட்பட்ட பயனாளர்களை தனது பிளாட்ஃபார்ம்களில் இருந்து அகற்றத் தொடங்கி உள்ளது!
நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்!
- ஆஸ்திரேலியாவில் உள்ள சிறார்களை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்தும், மனநலப் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின்படி, Facebook, Instagram மற்றும் Threads ஆகிய தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு வைத்திருக்கக் கூடாது.
- காலக்கெடு டிசம்பர் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே Meta நிறுவனம், சிறுவர்கள் எனக் கருதும் நூற்றுக்கணக்கான கணக்குகளை நீக்கத் தொடங்கிவிட்டது.
- குறிப்பாக, Instagram-ல் மட்டும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 3,50,000 பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம் மீறினால் அபராதம்!
- இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் ரூ. 275 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.
- அதனால், Meta மட்டுமின்றி TikTok மற்றும் YouTube போன்ற முக்கிய தளங்களும் இந்தச் சட்டத்திற்கு இணங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- பயனர்கள் தங்கள் தரவுகளைப் பதிவிறக்க அனுமதி அளித்துள்ள Meta, அவர்களுக்கு 16 வயது ஆனவுடன் மீண்டும் கணக்குத் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.