Posted in

F-16 வைத்து இந்தியாவை தாக்க உள்ள பாக்கிஸ்தான்: அதற்கு உதவும் அதிபர் டொனால் ரம் !

பாகிஸ்தான் விமானப் படையில் உள்ள F-16 ரகப் போர் விமானங்களைத் தரம் உயர்த்துவதற்காக அமெரிக்கா 686 மில்லியன் டாலர்களை (M மில்லியன் அல்ல) ஒதுக்கியுள்ளது. அதாவது, இந்த போர் விமானங்களை மேம்படுத்த உதவுகிறது. இந்த F-16 ரக விமானங்களில், புதிதாகப் பல ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. ஏன் என்றால், அமெரிக்காவின் மிகவும் தரமான ஏவுகணைகள் பாகிஸ்தான் விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. அவை இந்தியாவின் போர் விமானங்களை வீழ்த்த வல்லது.

பாகிஸ்தானிடம் தற்போது 80 F-16 ரக அதிநவீனப் போர் விமானங்கள் உள்ளன. அதில் 52 விமானங்களை அமெரிக்கா மேம்படுத்திக் கொடுக்கிறது. இது இந்தியப் பாதுகாப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைய உள்ளது என்பது கசப்பான உண்மை. சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யாவுடன் பாராட்டும் நட்புக்குப் பதிலடியாகத்தான் இந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த அறிவிப்பை அடுத்து மோடி அதிபர் டிரம்போடு தொடர்பு கொண்டுள்ளார்.

மோடியின் அதிருப்தி மற்றும் டிரம்பின் வியூகம்

பிரதமர் மோடி, தனது அதிருப்தியை, டொனால்ட் டிரம்புக்கு நேரடியாகவே தெரிவித்திருந்தார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஜனநாயக நாடு யாரோடு நட்பு வைத்திருப்பது என்பதை, அந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும்; வேறு ஒரு நாடு அல்ல என்ற கருத்தை மோடி அவர்கள், டொனால்ட் டிரம்புக்கு சொன்னதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானை பலப்படுத்துவது என்ற முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். இதன்மூலமாக இந்தியாவை அமெரிக்காவின் காலடியில் விழவைக்க முடியும் என்பது டிரம்பின் கணக்கு.

இந்தியாவின் அவசரத் தேவை

அடுத்து பாகிஸ்தானுக்கு நெடுந்தூர ஏவுகணைகளைக் கொடுக்க அமெரிக்கா முடிவு செய்யக்கூடும் என்று அமெரிக்க பெண்டகன் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. பாகிஸ்தானில் இருந்து ஏவினால், தமிழ்நாடு வரை பறந்து வந்து தாக்கக்கூடிய நெடுந்தூர ஏவுகணைகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, இந்தியா தனது தேசியப் பாதுகாப்பை உடனடியாக மேம்படுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை உடனடியாகத் தரம் உயர்த்த வேண்டியது உள்ளது. இல்லையெனில், ரஷ்யாவின் அதிநவீனப் போர் விமானமான (Sukhoi Su-57 Felon) விமானத்தை இந்தியா கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது.