ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்களின் ‘ஹனுக்கா’ (Hanukkah) பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னால் இருந்தது தந்தையும், மகனும் என்று ஆஸ்திரேலிய காவல்துறை இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
பலிகள் எண்ணிக்கை: இந்த நரவேட்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயது சிறுமியும் அடக்கம்.
-
காயம்: மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
-
தாக்குதல் நோக்கம்: இது யூத சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல் என்றும், வெறுப்புத் தாக்குதல் (Antisemitic Attack) என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டித்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் நிலை என்ன?
அடையாளம் காணப்பட்ட அந்தத் தந்தை-மகன் கூட்டணியின் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன:
-
தந்தை (50 வயது): துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-
மகன் (24 வயது): இவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளில் மிக மோசமான சம்பவம்!
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கொடூரமான துப்பாக்கிச்சூடு ஆஸ்திரேலிய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சம்பவ இடத்தில் வெடிக்காத வெடிகுண்டுகளும் (Improvised Explosive Devices) தாக்குதல் நடத்தியவர்களின் காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
இந்தத் தாக்குதல், அமைதியாக நடந்து கொண்டிருந்த பண்டிகைக் கொண்டாட்டத்தை ரத்தக் களறியாக மாற்றியது. 10 முதல் 87 வயதுடையவர்கள் வரை இதில் பலியாகியுள்ளனர்.