வாவ்… தம்பி மெர்சல் பண்ணிட்டியேப்பா! சோபா Boy’ன் கலக்கலான ஆல்பம் சாங்!

சோபா

தனது தந்தையுடன் சென்று சோபா தொழில் செய்து சமூக வலைதளங்கள் முழுக்க மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் சிறுவன் முகமது ரசூல் . இவர் தனது தந்தை சொந்தமாக நடத்தி வரும் சோபா தொழிலுக்காக தானே விளம்பரம் செய்து வித்தியாசமான பேசி ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

சிறுவன் முகமது ரசூல் பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் தந்தைக்காக இவர் உழைக்கும் கடின உழைப்பும் , சிறுவயதிலே அவருக்கு இருக்கும் பொறுப்பும் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

அந்த படப்பிடிப்பு தளத்தில் கூட படக்குழுவினரை அறிமுகம் செய்து வைத்த கலகலப்பான வீடியோ எல்லோரையும் கவர்ந்தது. தற்போது சோபா பாயின் கலக்கல் ஆன ஆல்பம் சாங் ஒன்று வெளியாகியுள்ளது. “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” என்ற தலைப்பில் இந்த ஆல்பம் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. அதில்குழந்தைகளின் ஜாலியான நடனம் அசத்தலாக இருக்கிறது.

இதில் முகமது ரசூல் பாடிக் கொண்டே டான்ஸ் ஆடி அனைவரையும் கலகலக்க வைத்துள்ளார்.இதன் மூலம் அவர் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக வளர்ந்து வருவதாக நெட்டிசன்ஸ் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இதோ அந்த வீடியோ: