சேலையில் தங்க சிலைபோல மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்!…..

Spread the love

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்…….

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி அடையாளத்தைப் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இவரின் வாழ்க்கையை தொடர்ந்தார். பின் 2011 ல் ”அட்டகத்தி” என்ற படத்தின் மூலம் துணைநடிகையாக அறிமுகமானார்.இதற்கு முன்பே 2010 ”நீ தானா அவன்” என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் இவர் பெரிதும் பேசப்படவில்லை.

2015 ல் ”காக்க முட்டை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். அதன் பின் தொடர்ந்து பல தமிழ் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவந்தார். தற்போது இவர் நடித்த டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், என அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பின் விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, உள்ளிட்ட படங்கள் மட்டும் இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் அவ்வவ்போது டிசென்டான புகைப்படங்களை மட்டுமே பதிவுசெய்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.