யாராச்சி ஒரு வாய்ப்பு குடுங்கப்பா

Spread the love

நடிகை சதாவின் வைரலாகும் லேட்டட்ஸ் போட்டோஷுட்…

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சதா. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் பின் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான “அந்நியன்’ படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து வர்ணஜாலம், திருப்பதி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகியாக வலம் வந்த சதாவுக்கு போகப் போகப் பெரியளவில் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு, கன்னடத்தில் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் 2015 ல் வடிவேலு நடிப்பில் வெளியான “எலி” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து மோசமான கமெண்ட்களை பெற்றார்.

இந்நிலையில் 2018 ல் “டார்ச் லைட்” என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்துக் கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டினார். இந்த நிலையில் சமீப காலமாகச் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார். தற்போது சிகப்பு நிற உடையில் போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவுசெய்து வைரலாக்கி வருகிறார்.