யோகிபாபுவின் ’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’: தேர்தலில் போட்டியா?

யோகிபாபுவின் ’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’: தேர்தலில் போட்டியா?

நடிகர்கள் அவ்வப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் நிலையில் யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற விளம்பரம் வந்துள்ள நிலையில் அந்த பெயரில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் மற்றும் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை சங்கர் தயால் என்பவர் இயக்கி உள்ளார் இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த சகுனி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிடப்பட்ட இந்த படம் அரசியல் கலைந்த நகைச்சுவை படம் என்றும் இதில் செந்தில் மற்றும் யோகி பாபு அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தேர்தல் நேரத்தில் இந்த படத்தின் விளம்பரம் வந்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது

இயக்குனர் சங்கர் தயால் இயக்கிய சகுனி திரைப்படமும் ஒரு அரசியல் படம் தான் என்பதும் அதேபோன்று இந்த படமும் அரசியல் நகைச்சுவை சென்டிமென்ட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.