உங்க அப்பா அம்மா வெட்கப்பட வேண்டும் பிக்பாஸ் ரக்சிதா ஆவேசம்…!

Spread the love

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா தனது சமூக வலைத்தளத்தில் முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் இருந்த வீடியோவை வெளியிட்டு ’உங்களை பெற்றதுதான் உங்கள் பெற்றோர்கள் செய்த தவறா? ஏன் இப்படி உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டீர்கள்? என ஆவேசமாகச் செய்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரக்சிதாவின் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: இந்த வயதான குழந்தைகளுடன் செலவழித்த நேரத்தை எனது வாழ்வில் என்றும் மறக்க முடியாது. மக்களே… உங்கள் பெற்றோர்மேல் ஏன் இந்தக் கோபம்? அவர்கள் செய்த தவறென்ன? உங்கள் பெற்றதுதானா? இந்த வயதான குழந்தைகள் இப்படி கஷ்டப்படுவதை பார்த்து மிகவும் நொந்து போய்விட்டேன், கண்டிப்பாக இதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்ல, தயவு செய்து உங்கள் பெற்றோர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற இல்லங்களை நடத்தும் தன்னார்வலர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு ஆசீர்வாதங்களை கொடுப்பார். முதியோர்களிடம் ஒரு நல்ல அரவணைப்பு மற்றும் ஆசீர்வாதம் இருப்பதை நான் உணர்கிறேன். அவர்களுக்குச் சேவை செய்வது ஒரு புனிதமான பணி… இந்த இல்லத்தை நடத்தி வருபவர்களுக்கு நம்மால் முடிந்ததைஅ செய்வோம்’ என்று பதிவு செய்துள்ளார்.மேலும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்குத் தனது கையால் உணவு பரிமாறிய ரக்சிதா அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்ட வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்குப் பாராட்டு தெரிவித்து கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.