18 முதல் 25 வயது இளைஞர்கள்…. இலவசமாக ஆண் உறையினை பெற்றுக்கொள்ள முடியும்!!!

Spread the love
ஆண் உறை

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2020 தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தேவையற்ற கர்ப்பங்களின் எண்ணிக்கையும், பாலியல் தொடர்பான நோய்களும் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்த அதேவேளை இவ் நோய்த் தாக்கமானது 18 தொடக்கம் 25 வயது பிரிவினர்களிடையே மிக அதிகமாக காணப்படுவதாக தெரிவித்தார்.

எனவே இவ்வாறான தேவையற்ற கர்ப்பங்களை தடுக்கவும், பாலியல் தொடர்பான நோய்களை குறைக்கவும் சிறந்த வழிமுறையாக எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதியில் இருந்து 18 தொடக்கம் 25 வயதுடைய இளைஞர்கள் இலவசமாக ஆண் உறையினை அனைதது இடங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு பகீரங்கமாக அறிவித்தார். அத்துடன் இதனை தடுக்க விசேட பாடத்திட்டங்கள் பாடசாலைகளில் உட்புகுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.