Posted in

செம்மணி-சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வு: இன்றுடன் நிறுத்தம்

செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி: 14ஆம் நாள் அகழ்வுப் பணி நேற்று நிறைவு – 63 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நேற்று (ஜூலை 9) 14வது நாளாக யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றன.

இதுவரையான அகழ்வுப் பணிகளில் மொத்தம் 24 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் அடங்கும். இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள்  இன்று(ஜூலை 10) நண்பகலுடன் தற்காலிகமாக முடிவடைய உள்ளன.

Exit mobile version