கணவர் என்று நினைத்து கொளுந்தனுடன் உறவு வைத்த பெண்- நிஜத்தில் நடந்த வாலி பட கதை

இந்த செய்தியை பகிருங்கள்

கணவன் என்று நினைத்து கொழுந்தனுடன் உறவு வைத்து இருந்திருக்கிறார் அந்த புதுப்பெண். ஆறு மாதங்களுக்கு பின்னர் தான் உறவு வைத்திருந்தது கணவர் அல்ல கணவரின் தம்பி என்று தெரியவந்திருக்கிறது. இரட்டை சகோதரர்களால் வாலி படம் மாதிரி நடந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறர் புதுப்பெண். அடுத்த பேரதிர்சிதான் அவரால் தாங்கமுடியாமல் போயிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் ரிங் ரோடு பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது. மணமகனுக்கு தம்பி உள்ளார். இருவரும் இரட்டை சகோதரர்கள். ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரில் யார் தன் கணவர் என்று அடையாளம் காண்பதில் புதுப்பெண்ணுக்கு பெரும் சிரமமாக இருந்திருக்கிறது.

இந்த வித்தியாசம் புரியாமல் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கொழுந்தன். அவர் அண்ணியை அனுபவிக்க வேண்டும் என்று துடித்து வந்திருக்கிறார்.

ஒருநாள் அண்ணியை உறவுக்கு அழைத்திருக்கிறார். கணவர் தான் தன்னை அழைக்கிறார் என்று நினைத்து அந்த புதுப்பெண் அவருடன் உறவு கொண்டிருக்கிறார். தான் உறவு கொண்டது கணவர் அல்ல கொழுந்தன் என்ற விவரம் ஆறு மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் தன் கணவரிடம் சொல்லி அழுதிருக்கிறார் . அதற்கு கணவர் தம்பி மீது ஆத்திரப்பட்டு நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்த பெண்ணுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி.

அதனால் என்ன, நானும் அவனும் ஒன்றாகவே வளர்த்தோம். ஒன்றாகவே ஒரே பெண்ணை அனுபவித்திட்டு போகிறோம். நீ அவன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்த அந்த புதுப்பெண் தாய் வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி இருக்கிறார்.

உடனே அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இரட்டை சகோதரர்களை கைது செய்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us