கையைமீறிப்போகும் நிலைமை.. ரஷ்யா மீது பிரிட்டிஷ் ஏவுகணையை ஏவிய உக்ரைன்.. பதறும் மேற்கு உலகம்

கையைமீறிப்போகும் நிலைமை.. ரஷ்யா மீது பிரிட்டிஷ் ஏவுகணையை ஏவிய உக்ரைன்.. பதறும் மேற்கு உலகம்

நியூயார்க்: ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் தற்போது பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளது.

நேற்று ரஷ்யாவில் 3 இடங்களில் பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கி உள்ளது. இது கிட்டத்தட்ட ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவுவதாக மாறி உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவை தொடர்ந்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்ப யுனைட்டட் கிங்டம் முடிவு செய்துள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள் மற்றும் Storm Shadow வகை ஏவுகணைகளை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ரஷ்யாவிற்கான அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மோதல் பின்னணி: அமெரிக்கா – ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் – உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும்.

அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் கவர் செய்கிறது. இப்படிப்பட்ட உக்ரைன் நேட்டோ படையில் சேர்ந்தால் அது ரஷ்யாவிற்கு சிக்கலாகும் என்பதால் ரஷ்யா உக்ரைனை தாக்கி உள்ளது. போர் நடக்கும் நாடுகள் நேட்டோ படையில் சேர முடியாது என்பதால் உக்ரைன் நேட்டோ படையில் சேர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பிடனின் செயல்: அமெரிக்கா அதிபர் பிடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. அமெரிக்காவின் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. இரண்டு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று இவர் மத்தியசம் பேசி உள்ளார். டிரம்ப் மத்தியசம் பேசியதற்கு இடையே.. தற்போது பிடன் ரஷ்யாவை சீண்டும் விதமாக உக்ரைனுக்கு புதிய பவர் வழங்கி உள்ளார். நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இது ரஷ்யாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.