பற்றி எறிந்த தியேட்டர்…. “இந்தியன் 2” படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பதறியடித்து ஓட்டம்!

பற்றி எறிந்த தியேட்டர்…. “இந்தியன் 2” படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பதறியடித்து ஓட்டம்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ஊழலை ஒழிக்கும் சேனாபதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பக்கம் உருவாகி வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்ட வருகிறது. இப்படத்தை இன்று காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். குறிப்பாக தியேட்டர்களில் பாலபிஷேகம் செய்தும் கமல்ஹாசன் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்தும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் புதுச்சேரியில் கமல் ரசிகர்கள் சிலர் இந்தியன் 2 பேனர் முன்பு 5 கிலோ கற்பூரத்தை கொளுத்தி இருக்கின்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருக்கும் பேனர் மீதும் பரவும் வகையில் சென்றது. அதனால் அங்கிருந்த போலீஸ் கற்பூரத்தை கீழே தள்ளி தண்ணீர் ஊற்றி அணைத்து இருக்கின்றனர்.

https://x.com/sunnewstamil/status/1811677115517116848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1811677115517116848%7Ctwgr%5Ea5a2e4bc8f9c412c89656a1b5972f422d94825e9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Findian-2-theater-fire-incident-with-camphor-1720781643