ஆக்டிவேட் செய்ய போகிறோம்! அணு ஆயுத வாட்ச் டாக்கிற்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கை! ரெடியாகும் அணுகுண்டு

ஆக்டிவேட் செய்ய போகிறோம்! அணு ஆயுத வாட்ச் டாக்கிற்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கை! ரெடியாகும் அணுகுண்டு

 

டெஹ்ரான்: சமீபத்தில் ஈரான் மீது ஐநாவின் அணு ஆயுத வாட்ச் டாக்.. அதாவது கண்காணிப்பு அமைப்பு விமர்சனம் வைத்து இருந்தது. அணு சக்தியை பயன்படுத்துவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை.. அவர்கள் அணுவை பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தது.

இதன் காரணமாக கடுப்பான ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போகிறதாம். அதனால் சென்ட்ரிபுகல் அமைப்பில்தான் அணுவை செறிவூட்ட முடியும். அதாவது ஒரு சிலிண்டர் அமைப்புகளை குறிப்பிட்ட வாயுக்களை அனுப்ப வேண்டும். இதன் மூலம் அணுவை செறிவூட்ட முடியும்.

இப்படிப்பட்ட அணுவை செறிவூட்டினால் மட்டுமே.. அதை ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதைத்தான் ஆக்டிவேட் செய்ய போவதாக ஈரான் அறிவித்து உள்ளது. அணு உலை: ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. ஈரான் அணு ஆயுதம்: இதற்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.

ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போவதாக அறிவித்து உள்ளது.