ரம் காதில் குண்டு பாய்ந்ததோடு அமெரிக்கா குழம்பி விட்டது இனி யாராலும் சொல்ல முடியாது என்ன நடக்கும் என்று !

ரம் காதில் குண்டு பாய்ந்ததோடு அமெரிக்கா குழம்பி விட்டது இனி யாராலும் சொல்ல முடியாது என்ன நடக்கும் என்று !

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், பெரும் குழப்பம் தோன்றியுள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் சொல் பேச்சுக் கேட்க்காமல் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் புத்தி தடுமாறிய நிலையில் இருப்பதால், மக்கள் அவருக்கு வாக்குப் போடுவார்களா என்று அவரது கட்சி மூத்த உறுப்பினர்கள் கவலையில் இருக்க. மறு முனையில் டொனால் ரம் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார் ஒருவர்.

மண்டையை அவர் குறிவைத்து தாக்கியுள்ளார். ஆனால் அக் குண்டு காதை பதம்பார்த்துள்ளது. இன் நிலையில் தற்போது ரம்புக்கு ஆதரவு பெருகியுள்ளது. இதனால் ரம் மற்றும் பைடன் ஆகியோர் சம நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. யார் வெற்றிபெறுவார்கள் என்று எவராலும் கூறமுடியாத நிலை தோன்றியுள்ளதாக கூறுகிறார்கள். வழமையாக அமெரிக்காவில் பல கருத்துக் கணிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளது. அவர்கள் கருத்துக் கணிப்பு எப்பவுமே சரியாகத் தான் இருக்கும்.

ஆனால் இந்த நிறுவனங்களே தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் அமெரிக்காவே குழம்பிய நிலையில் உள்ளது என்று தான் கூறவேண்டும் .