தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படுவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக பார்க்கப்படுகிறார். இவர் இந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று உலகளவில் புகழ்பெற்றாலும் கூட தமது தமிழ் தாய் மொழியான தமிழை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டார்.
எந்த மேடையில் அவர் ஏறி பாடல் பாடினாலும் அங்கு தமிழ் மொழிக்கு என்று பெரிய கௌரவத்தையே அவர் சேர்த்து வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார். ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இதுவரை பல திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் இசை அமைத்தும் இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழ் திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் அறிமுகமாகி இருந்தார். ரோஜா திரைப்படம் தான் இவர் இசையமைத்த முதல் திரைப்படம்.
அந்த திரைப்படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இசை அமைத்திருக்கும் இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று ஆஸ்கார் நாயகனாக பார்க்கப்பட்டு வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நெருக்கமான நண்பர்கள் உங்களுக்கு யார்? என கேள்வி கேட்டதற்கு நண்பன் என்று பார்த்தால் எனக்கு யாருமே இல்லை. என்னோட கார் டிரைவர் ராஜ் என்பவர் தான் நண்பர் என கூறினார். நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் உலகப் புகழ்பெற்ற ஒருவரே இப்படி பேசியுள்ளது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. நல்லவர்கள் பக்கத்தில் அதிக நண்பர்கள் இருக்க மாட்டர்கள்.