நட்சத்திர நடிகராக அந்தஸ்தை படித்திருக்கும் நடிகர் தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷின் பேச்சு மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செல்வராகவன் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் செல்வராகவன் நடித்தது. குறித்து பேசிய தனுஷ் உங்களுடைய இயக்கத்தில் நான் துள்ளுவதோ இளமை படத்தில் போது நீங்கள் என்னை எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…? புருவம் ஒரு பக்கம்தான் தூக்கணும்…. கண்ணு 4 முறை தான் சிமிட்டனும் இப்படி எல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ணீங்களே இந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்து டேக் வாங்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது என்று கூறினார்.
ராயன் படத்தில் அதற்காக உங்களை பழிவாங்கினேன் என தனுஷ் கூற அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. அதேபோல் செல்வராகவன் பேசும்போது யாரும் தம்பிகளை சிறுவயதில் அடிக்க வேண்டாம்… அவர்களை உதைக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் வளர்ந்து வந்து உங்களை வச்சு செய்வாங்க என்று கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.