எனது ஆட்சியில் இன வேறுபாடு மற்றும் மத வேறு பாடுகளுக்கு இடமில்லை- அனுரா திட்டவட்டம் !

எனது ஆட்சியில் இன வேறுபாடு மற்றும் மத வேறு பாடுகளுக்கு  இடமில்லை- அனுரா திட்டவட்டம் !

இலங்கைப் பாராளுமன்றில், இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க பாராளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை, நாட்டை எப்படி கட்டி எழுப்புவது என்பது தொடர்பான பல விடையங்களை விபரித்துள்ளது. இருந்த போதிலும் எனது ஆட்சியில், இன வேறுபாட்டிற்க்கும், மத வேறுபாட்டிற்கும் இடம் கிடையாது என்று அனுரா மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அவர் எதனையும் பேசவில்லை. இருப்பினும் அதனை அமுலுக்கு கொண்டுவர அனுரா விரும்புவதாக யாழில் அவர் பேசும் போது தனது நெருங்கிய தமிழ் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அத்தோடு வாக்குறுதியும் கொடுத்துள்ளார்.