திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார். அங்கு அவர் தாதியாக பணியாற்றுவதோடு கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் தாதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான நேற்று(20) அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதியில் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பெண் பணத்துடன் இருக்கிறார் என்று நன்றாகத் தெரிந்த நபர்களே இவ்வாறு ஈனத் தனமான செயலில் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த பெண்ணின் 30 வருட உழைப்பு ஒரு நொடியில் பறிபோய் உள்ளது.