அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள், ஏதோ ஒரு நோக்கத்திற்காக திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய முடிவு. அதாவது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கொடுத்து இருக்கும், நெடுந்தூர சக்த்திவாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவ, உக்ரைனுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த முடிவை அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் எட்டியது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
இதனால் 3ம் உலகப் போர் ஒன்று வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால், ரஷ்யா உக்ரைன் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்தக் கூடும். இதேவேளை அனுமதி கிடைத்த சில தினங்களில், பிரித்தானியா கொடுத்த Storm Shadow என்ற ஏவுகணையை நேற்றைய தினம்(19) உக்ரைன் பாவித்துள்ளது. இது துல்லியமாக இலங்கை தாக்கி பெரும் அழிவை இது ஏற்படுத்த வல்லது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
ஏதோ ஒரு கட்டத்தில் உக்ரைன் மீது ரஷ்யா, அணு குண்டை பாவிகப் போகிறது என்று அமெரிக்கா அறிந்து கொண்டதால். அதற்கு முன்னர் ரஷ்யாவை எந்த அளவு அழிக்க முடியுமோ அந்த அளவு அழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கருதுகிறதோ தெரியவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அணு குண்டைப் போட்டால், அதில் இருந்து பரவும் கதிர் இயக்க துகள்கள் ஐரோப்பிய வான் பரப்பில் மிதக்க ஆரம்பிக்கும். இதனை சுவாசித்தால், நுரையீரல் புற்றுநோய் உடனடியாக உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் உக்ரைன் மட்டும் பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது.