யாழில் 8 இளைஞர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் ஒருவர் அல்லது இருவரேனும் ஐஸ் என்னும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பர்கள். அல்லது சில சமயங்களில் அதனைப் பாவித்தும் இருப்பார்கள். இது யாழில் மட்டும் அல்ல, கொழும்பு, மற்றும் தென் இலங்கை முழுவதும் வேரோடிப் போய் உள்ள ஒரு சீரழிவு. மாத்தறை- கந்தர பகுதியில் பெரும் அளவில் ஐஸ் போதைப் பொருள் இருக்கும் ஒரு வீடு பற்றி பொலிசார் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் குறித்த நபர்கள் பெரும் செல்வாக்கு மிக்கவர்கள்.
அத்தோடு பொலிசார் செல்ல முன்னரே அங்கிருந்து அவர்கள் அனைத்தையும் அகற்றிவிடுவார்கள். காரணம் பொலிஸ்காரர்களே தகவலையும் கொடுத்து விடுவார்கள். இன் நிலையில், இந்தக் கும்பலை உடனடியாக கைதுசெய்யுமாறு மேல் இடத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததை அடுத்து. மாத்தறை- கந்தர பகுதியில் நேற்றைய தினம், பொலிசார் குறித்த வீட்டை முற்றுகையிட்ட வேளை, அங்கே சுமார் 160KG கிலோ ஐஸ் போதைப் பொருள் இருந்துள்ளது. அத்துடன் அந்த வீட்டில் இருந்த 10பேரையும் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.
கேரள கஞ்சா மற்றும் சில போதைப் பொருட்கள் யாழ்ப்பாணம் வருவது போல, ஐஸ் போதைப் பொருள் நேரடியாக தென் இலங்கை சென்று , அங்கிருந்து தான் யாழ்ப்பாணத்திற்கு செல்கிறது. இதுபோன்ற சில போதைப் பொருட்கள் தென்னிலங்கைக்கு கப்பல் மூலமாக வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனையும் தற்போது பொலிசார் தடுத்து நிறுத்தவேண்டிய கடைப்பாட்டில் உள்ளார்கள். காரணம் மேல் இடம் இதற்கு அனுமதி கொடுக்காது என்பது தான்.