அச்சு அசல் தமன்னாவை போலவே இருக்கும் ஆண் – அவரே பதிவிட்ட போட்டோ!

அச்சு அசல் தமன்னாவை போலவே இருக்கும் ஆண் – அவரே பதிவிட்ட போட்டோ!

நட்சத்திர நடிகையான நடிகையான தமன்னா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, கோ வேங்கை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.

இதனிடையே பாலிவுட்டில் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரிசலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக அவரின் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடரில் நடித்த தம்மன்னா அதன் மூலம் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கிக்கொண்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு மீம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஆண் ஒருவர், ” விஜய் தேவரகொண்டா போல் உடையை அணிய நினைத்து Oosaravelli படத்தில் வரும் தமன்னா போல் மாறிவிட்டார்” என்று கலாய்த்தபடி மீம் பதிவிட்டு இருந்தனர். தமன்னா இந்த மீம்மை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “கிட்டத்தட்ட” என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா , tamanna bhatia , cinema news , kollywood news