பயந்துபோன விஜய்…. GOAT படத்தின் மீது நம்பிக்கை இழந்த ரசிகர்கள்

பயந்துபோன விஜய்…. GOAT படத்தின் மீது நம்பிக்கை இழந்த ரசிகர்கள்

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் GOAT படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளினர். இந்த புகழ்ச்சியின் மிதப்பில் இருந்த வெங்கட் பிரபு படத்தின் வேலைகள் கவனமாக செய்யமால் கோட்டை விட்டுவிட்டாராம்.

இதையடுத்து இயக்குனரை புகழ்ந்த நடிகர் விஜய், சற்று பயந்துபோயுள்ளாராம். இதனால் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் புகழ்ச்சியை மட்டும் தெரிவிக்காமல், இப்படத்தை அனைவரும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள், கவனமாக பார்த்து பண்ணுங்க என அட்வைஸ் கொடுத்துள்ளாராம் நடிகர் விஜய்.

நடிகர் விஜய், வெங்கட் பிரபு , GOAT திரைப்படம், vijay , venkat prabhu,