இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், கலந்துகொண்ட அர்ச்சுணா MP, எதிர் கட்சி காரியாலயம் சென்று அங்கே சுஜித் என்ற நபருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். தான் முதன் நாள் வந்து எதிர் கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தது தொடர்பான விசாரணையை தள்ளுபடி செய்யுமாறு அர்ச்சுணா கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் போகவே அர்ச்சுணாவின் கன்னத்தை பதம் பார்த்துள்ளார் சுஜித் என்ற நபர்.
இதன் பின்னர் பாராளுமன்றம் கூடிய வேளை, மீண்டும் எதிர்கட்சி உறுப்பினர் எழுந்து முதல் நாள் நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய வேண்டும் என்று பேச… உடனே குறுக்கிட்ட அர்ச்சுணா தாம் தாக்கப்பட்டதாகவும். தன்னை தாக்கிய நபர், மிகவும் முதியவர் என்றும். அதனால் தான் திருப்பித் தாக்கவில்லை, அப்படி நான் தாக்கி இருந்தால் அவருக்கு CPற்(அவசர சிகிச்சை) கொடுக்கவேண்டி இருந்திருக்கும் என்றும் கூறினார்.
இதனை அடுத்துப் பேசிய எதிர் கட்சி உறுப்பினர், யாழ்ப்பாணத்தில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு வென்று வந்தவர் அர்ச்சுணா, சிலர் படித்திருந்தாலும் புத்தியில்லாதவர் போல செயல்படுவார்கள் என்று கூறினார். இதனால் அரிசி விலை குறைப்பு, விவாதம், பொருளாதாரம், மரக்கறி விலை குறைப்பு என்று பல, விவாதங்கள் நடைபெறவேண்டிய நிலையில், அர்ச்சுணாவின் கலகம், விவாதிக்கப்பட்டு வருகிறது. சக்கை கோமாளி ஒன்றை மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி, தமிழர்களின் ஒட்டு மொத்த மானத்தையும் வாங்கியுள்ளார்கள் என்பதே உண்மை நிலை ஆகும். இது போல ஒரு 2 கோமாளிகள் போதும், பாராளுமன்றத்தையே நாசம் செய்ய !