கர்ப்பமாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள்… வளைகாப்பு வீடியோ!

கர்ப்பமாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள்… வளைகாப்பு வீடியோ!

மேடை சிரிப்புரை அறிஞராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ரோபோ சங்கர். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்தபோது விரைவிலே பிரபலமாகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் அந்த டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை குணசேத்திர வருடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவரது திரைப்பயணம் தீபாவளி திரைப்படத்தில் ஆரம்பித்தது. தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மிக முக்கியமான கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

சில மாதங்களுக்கு ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 6 மாதங்களில் இந்திரஜா கர்ப்பமாகி இருக்கிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவர் ராதா, எப்போது மகிழ்ச்சி செய்தியை எங்களுக்கு சொல்லப்போகிறீர்கள் என இருவரிடமும் கேட்க, இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவரும் தாய், தந்தை ஆகப்போகிறோம் என கூறி, தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு அங்கேயே சிம்பிளாக வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்தனர்.

robo-shankar-daughter-indraja-shankar-is-pregnant