“என் அம்மாவுக்கு பிடிக்காத ஒரே விஷயம்”.. ஆஸ்கார் அவார்டே கொடுத்தாலும் அத பண்ண மாட்டேன்!

“என் அம்மாவுக்கு பிடிக்காத ஒரே விஷயம்”.. ஆஸ்கார் அவார்டே கொடுத்தாலும் அத பண்ண மாட்டேன்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில்…. நான் திரைப்படங்களில் நடிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மெனக்கெட்டு இருக்கிறேன். என்னுடைய எலும்புகள் உடைந்து தோள்பட்டை இறங்கிவிட்டது. கை கால்களில் கீறல் அடிபட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. எவ்வளவு கடின உழைப்பை நான் கொடுத்திருக்கிறேன்.

இவ்வளவு செய்துள்ள நான் என் அம்மாவுக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என் வாழ்நாளில் நான் செய்யவே மாட்டேன் என கூறியிருக்கிறார். என் அம்மா என்னுடைய தலைமுடி நீளமாக வளர்வதற்கு நிறைய அக்கறை எடுத்திருக்கிறார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் ஊற வைத்து மசாஜ் செய்வார்.

என்னுடைய தலைமுடி அழகாக இருப்பதை நினைத்து அவர் மிகவும் பெருமை கொள்வார். அந்த அளவுக்கு என்னுடைய தலைமுடி மீது அவருக்கு அதீத காதல் இருக்கும். ஒருமுறை என்னுடைய முதல் படத்திற்காக தலைமுடியை கொஞ்சம் நான் வெட்டினேன்.

அப்போது என்னுடைய அம்மா என் மீது கடும் கோபம் பட்டார் எந்த சூழலிலும் தலை முடியை வெட்டக்கூடாது எனக் கூறினார். அதனால் என்னுடைய தலைமீது மட்டும் நான் கையை வைக்க மாட்டேன். படத்திற்காக நான் மொட்டை அடிக்கவே மாட்டேன். அப்படி ஒரு ரோலுக்காக எனக்கு ஆஸ்கார் விருதே கொடுத்தாலும் நான் மொட்டை மட்டும் அடிக்க மாட்டேன் என கஜானவி கபூர் கூறியிருக்கிறார்.

ஜான்வி கபூர், நடிகை ஸ்ரீதேவி, janhvi kapoor , Cinema news , Kollywood news