முதல் படத்திலே 4 விருதுகளை தட்டித்தூக்கிய அதிதி ஷங்கர்… குவியும் பாராட்டுக்கள்!

முதல் படத்திலே 4 விருதுகளை தட்டித்தூக்கிய அதிதி ஷங்கர்… குவியும் பாராட்டுக்கள்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை கோலிவுட்டில் தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அதிதி சங்கர் ஏற்கனவே விருமன் படத்தில் அறிமுகமாகி நடித்ததற்கு மூன்று விருதுகளை பெற்றார். தற்போது சிறந்த அறிமுக நடிகைக்கான Film Fare விருதினையும் வாங்கியுள்ளார். மொத்தம் அறிமுகப்படத்திற்கு மட்டும் இதுவரை 4 விருதினை பெற்றிருக்கும் அதிதி சங்கர் Film Fare விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

.அதிதி ஷங்கர், aditi shankar , cinema news , Kollywood news , Film Fare award ,