திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… வில்லன் லுக்கில் மிரட்டும் ரோபோ ஷங்கர் – வீடியோ

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… வில்லன் லுக்கில் மிரட்டும் ரோபோ ஷங்கர் – வீடியோ

மேடை சிரிப்புரை அறிஞராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ரோபோ சங்கர். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்தபோது விரைவிலே பிரபலமாகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் அந்த டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை குணசேத்திர வருடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவரது திரைப்பயணம் தீபாவளி திரைப்படத்தில் ஆரம்பித்தது. தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மிக முக்கியமான கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் மோசமான நிலையில் நலிவடைந்து போனார். இந்த நிலையில் தற்போதும் மீண்டும் தனது உடல்நிலை ஏற்றி பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார் ரோபோ சங்கர். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வருகிறார். நிலையில் தற்போது வில்லன் லுக்கில் மிரட்டலாக எடுத்துக்கொண்ட போட்டோ சூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு “ஐ அம் பேக்” என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது அனைவரும் கவனத்தையும் வைத்திருக்கிறது.

https://www.instagram.com/reel/C_DYpIzSHli/?utm_source=ig_web_copy_link