தீபாளிக்கு வெளியாகும் நயன்தாராவின் திருமண வீடியோ – காத்திருப்பில் ரசிகர்கள்!

தீபாளிக்கு வெளியாகும் நயன்தாராவின் திருமண வீடியோ – காத்திருப்பில் ரசிகர்கள்!

தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சி வீடியோ வருகிற தீபாவளி தினத்தில் netflix தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த திருமணத்தில் நயன்தாராவின் பேட்டி திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. இந்த வீடியோவை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.