இன்று நாட்டை வந்தடையவுள்ள பெற்றோல் தாங்கிய கப்பல் : ஆனால் வரிசையில் நிற்கும் மக்களை சென்றடையுமா என்பது கேள்விகுறியே???

இந்த செய்தியை பகிருங்கள்

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ள பின்னணியில் அதற்காக மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us